Thursday, March 26, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமக்களுக்கு நிவாரணம் வழங்க பிரதமர் விசேட நடவடிக்கை

மக்களுக்கு நிவாரணம் வழங்க பிரதமர் விசேட நடவடிக்கை

அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறைக்கு தீர்வு கண்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான முன்மொழிவுகளை பெற்றுக் கொள்வதற்கு பிரதமர் ரணில் விசேட குழுவொன்றை நியமித்துள்ளார்.

இதன்படி, மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கு, உரிய பிரிவினருடன் கலந்துரையாடி யோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்காக இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் வஜிர அபேவர்தன மற்றும் பாலித ரங்கே பண்டார ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான ருவன் விஜேவர்தனவிடம் மருந்து தட்டுப்பாட்டைத் தவிர்ப்பது தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் பணியும், அகில விராஜ் காரியவசமிடம் உர நெருக்கடி குறித்து ஆராய்ந்து அறிக்கையளிக்கும் பணியும் கையளிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles