Monday, March 16, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதுப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

ரன்ன -கஹந்தமோதர பிரதேசத்தில் இன்று (06) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தனிப்பட்ட தகராறு காரணமாக இ;நத துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவத்தில் கஹந்தமோதர பிரதேசத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த நபர் தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கட்டாஸ் ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹுங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles