கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை போதை மாத்திரைகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
புவனேக கடற்படையின் புலனாய்வுப் பிரிவின் விசேட அதிரடிப்படையின் இலுப்புக்கடவாய் முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், இலுப்புக்கடவாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூன்றாம்பிடி தடாகத்திற்கு அருகில் நேற்று (28) இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 53,000 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதுடன், அவை மேலதிக விசாரணைக்காக இலுப்புக்கடவாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.