Tuesday, November 25, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபன்னிபிட்டிய ஊதுபத்தி தொழிற்சாலையில் தீப்பரவல்

பன்னிபிட்டிய ஊதுபத்தி தொழிற்சாலையில் தீப்பரவல்

பன்னிபிட்டிய, மஹல்வராவ பிரதேசத்தில் ஊதுபத்தி தயாரிக்கும் நிறுவனம் மற்றும் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் இன்று (12) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 7 மணியளவில் இந்த தீப்பரவல் ஏற்பட்டதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.

தீயினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், ஆடைத் தொழிற்சாலையில் பல இலட்சம் பெறுமதியான ஆடைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தீ பரவியதையடுத்து, கோட்டை தீயணைப்புத் திணைக்களத்தின் 2 தீயணைப்பு வண்டிகள் மற்றும் மூன்று தண்ணீர் பௌசர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் மஹரகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles