Wednesday, May 6, 2026
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுத்தகை நிறுவனம் ஒன்றில் 71 இலட்சம் ரூபா கொள்ளை

குத்தகை நிறுவனம் ஒன்றில் 71 இலட்சம் ரூபா கொள்ளை

சிலாபத்தில் உள்ள பிரதான குத்தகை நிறுவனமொன்றின் கிளையில் உள்ள பெட்டகத்தை உடைத்த கொள்ளையர்கள், சுமார் 71 இலட்சம் ரூபா பணத்தை திருடிச் சென்றுள்ளதாக சிலாபம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த குத்தகைக் நிறுவனத்திற்குள் நுழைந்த கொள்ளையர்கள் குழுவொன்று சுவர்களை உடைத்து உள்ளே நுழைந்ததாகவும் அதன் பின்னர் பல மணித்தியாலங்கள் அங்கு தங்கியிருந்து இயந்திர கிரைண்டரைப் பயன்படுத்தி இரண்டு பெட்டகங்களை வெட்டி அதிலிருந்த பணத்தை எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை குந்தகை நிறுவன ஊழியர்கள், கடமைக்காக சென்றபோது, தமது நிறுவனத்தின் பெட்டகங்கள் உடைக்கப்பட்டு பணம் எடுத்துச் செல்லப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அவர்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சிலாபம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles