Wednesday, May 6, 2026
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொக்கட்டிச்சோலையில் 65 லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது

கொக்கட்டிச்சோலையில் 65 லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள அம்பளாந்துறை பாடசாலை வீதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் நேற்று மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டது.

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரை 85 போத்தல் கொண்ட 65 லீற்றர் கசிப்புடன் கைது செய்ததுடன் 15 பீப்பாக்கள் மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்களை மீட்டு ஒப்படைத்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர்.

யுக்தி தேசிய நடவடிக்கையின் கீழ் கொக்கட்டிச்சோலையில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியை முற்றாக ஒழிக்கும் திட்டத்தில் மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி தலமையிலான பொலிஸ் குழுவினர் நேற்று பகல் குறித்த வீதியிலுள்ள கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles