Friday, May 9, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயுக்திய நடவடிக்கை: இன்று 878 பேர் கைது

யுக்திய நடவடிக்கை: இன்று 878 பேர் கைது

நாடளாவிய ரீதியில் இன்று (01) காலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 878 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்களுக்காக 649 சந்தேகநபர்களும், தேடப்பட்டுவந்த 229 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் போது 130 கிராம் ஹெரோயின், 134 கிராம் ஐஸ் மற்றும் ஏனைய போதைப்பொருள்கள் பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

3 சந்தேக நபர்களை தடுப்புக் காவலில் வைத்து மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், போதைப்பொருளுக்கு அடிமையான 4 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

தேடப்பட்டுவந்த 229 சந்தேக நபர்களில், போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணை பெற்ற 26 சந்தேக நபர்களும், போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணை பெற்ற 192 பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைரேகைகள் மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களும், குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த 8 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles