வடக்குயாழில் 2,000க்கு மேற்பட்ட போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

யாழில் 2,000க்கு மேற்பட்ட போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் நோக்குடன் உடைமையில் வைத்திருந்த ஒருவர் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து 2,000க்கு மேற்பட்ட போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ் மாநகர எல்லையில் வைத்து 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிறேமதிலக தலைமையிலான குழுவினர் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles