சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளை வைத்திருப்போர் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு ரொக்கப்பரிசு வழங்க பொலிஸ் முடிவு செய்துள்ளது.
இதன்படி, பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன், அனைத்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிரதேச அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்களுக்கு இது தொடர்பான பணிப்புரைகளை விடுத்துள்ளார்.
அவ்வாறான தகவல்களை வழங்கும் நபர்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்பட்டு, கீழ்க்கண்டவாறு பண வெகுமதிகள் வழங்கப்படும்.