வடக்குகிளிநொச்சியில் கோர விபத்து: பெண்ணும் 8 மாடுகளும் பலி

கிளிநொச்சியில் கோர விபத்து: பெண்ணும் 8 மாடுகளும் பலி

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இபோச பேருந்துடன், கொழும்பியிருந்து யாழ்ப்பாணம் நோக்கி எதிரே பயணித்த வேன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பேருந்து விதியில் பயணித்த மாடுகளுடன் மோதிய பின் வேனுடன் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் வவுனியாவை சேர்ந்த 50 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காயமடைந்தவர்களில் ஐவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் தொடர்ந்தும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, குறித்த விபத்தில் மோதுண்ட 8 மாடுகளும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles