Saturday, January 17, 2026
30 C
Colombo
செய்திகள்உலகம்அமெரிக்காவின் பாடசாலையொன்றில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

அமெரிக்காவின் பாடசாலையொன்றில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் உள்ள உயர்நிலைப் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

பாடசாலை விடுமுறை நிறைவடைந்து பாடசாலைகள் ஆரம்பிக்கும் போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அந்த பாடசாலையில் 6 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த ஐவரில் நால்வர் பாடசாலை மாணவர்கள் என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட 17 வயது மாணவனும் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles