Saturday, October 11, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிரசவ வலியால் தவறான முடிவெடுத்த பெண்

பிரசவ வலியால் தவறான முடிவெடுத்த பெண்

கடந்த 18ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த அஹுங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரின் சடலம் நேற்று (20) பலபிட்டிய, மங்கட கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

29 வயதுடைய இரண்டு இரட்டைக் குழந்தைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த குறித்த பெண், 9 நாட்களுக்குப் பிறகு கடிதம் எழுதிவிட்டு, கடந்த 19ஆம் திகதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

29 வயதுடைய அஹுங்கல்ல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

திருமணமாகி சுமார் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரட்டைக் குழந்தைகளின் பிரசவத்தின் போது ஏற்பட்ட சிக்கலால் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் சில தினங்களுக்கு முன்னர் வீடு திரும்பினார்.

‘என்னால் வலியைத் தாங்க முடியவில்லை, அதனால் இரண்டு குழந்தைகளை கவனித்துக்கொள்ளமுடியவில்லை.நான் வீட்டை விட்டு வெளியேறுகிறேன்’ என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ​​கடற்கரையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தனது மனைவியுடையது என கணவர் அடையாளம் கண்டுள்ளதுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles