அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (12) சற்று வீழ்ச்சி கண்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி முறையே 322. 24 ரூபாவாகவும், 332.32 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் (11) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி முறையே 322.18 ரூபாவாகவும், 332.37 ரூபாவாகவும் காணப்பட்டது.
