Saturday, June 27, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமோட்டார் சைக்களில் அழைத்து செல்ல மறுத்த பொலிஸ் சார்ஜன்டை தாக்கிய நபர் கைது

மோட்டார் சைக்களில் அழைத்து செல்ல மறுத்த பொலிஸ் சார்ஜன்டை தாக்கிய நபர் கைது

மோட்டார் சைக்கிளில் அழைத்துச் செல்ல மறுத்த பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய நபரை பள்ளம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (11) பிற்பகல் அதிகம, பெரியமடுவ பிரதேசத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரஸ்நாயக்க பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தனது பணியை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது – ​​அதிகமஇ பெரியமடுவ பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி, தன்னையும் அழைத்துச் செல்லுமாறு நபர் ஒருவர் கோரிக்கை விடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த கோரிக்கையை பொலிஸ் அதிகாரி நிராகரித்துள்ளதுடன், அதன் போது குறித்த நபர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைக்காக நிகவெரட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை இன்று (12) ஹலவத்த நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாக பள்ளம பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles