வெலிகந்தையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இன்று (06) காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பொலன்னறுவை நகர சபையின் தீயணைப்பு பிரிவு, இராணுவ அதிகாரிகள் மற்றும் வெலிகந்த பொலிஸ் நிலைய அதிகாரிகள் இணைந்து தீயை தற்போது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பதுடன், தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.