Saturday, April 19, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாகன விபத்து இழப்பீடு: புதிய சட்டம் விரைவில்

வாகன விபத்து இழப்பீடு: புதிய சட்டம் விரைவில்

வீதி விபத்துக்களினால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு செல்லாமல் இழப்பீடுகளை பெற்றுக்கொள்ளும் வகையில் ஒரு மாத காலத்துக்குள் சட்ட கட்டமைப்பை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு எதிர்பார்ப்பதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தேவையான விதிமுறைகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இந்த புதிய முறையின் மூலம் கார் விபத்தில் சிக்கிய தரப்பினர் நீதிமன்றத்திற்கு செல்லாமலேயே 500,000 ரூபா வரை இழப்பீடு பெற முடியும்.

விபத்தின் தன்மைக்கு ஏற்ப பாதிக்கப்பட்டவர்களுக்கு 500,000 ரூபா போதாது, பின்னர் நீதிமன்றத்திற்குச் சென்று போதுமான இழப்பீடு பெற வாய்ப்பு உள்ளது, என்றார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles