Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபம்பலப்பிட்டியில் போலி கல்வி நிலையம் - பெண் கைது

பம்பலப்பிட்டியில் போலி கல்வி நிலையம் – பெண் கைது

கொழும்பு, பம்பலப்பிட்டி பகுதியில் போலி கல்வி நிலையம் ஒன்றை நடத்தி பணமோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நவம்பர் 27 ஆம் திகதி பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கிரியுல்ல, நாரங்கமுவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஆவார்.

சட்டப்பூர்வ அனுமதியின்றி ஆன்லைன் கல்வி வகுப்புகளை நடத்தி, போலி டிப்ளோமா சான்றிதழ்களை இந்த நிறுவனம் வழங்கியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

கைதான சந்தேக நபர், குறித்த நிறுவனத்தின் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளதுடன், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் ஆயிரம் பேர் இந்த மோசடியில் சிக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles