இன்று (01) முதல் செயல்படாத Gmail கணக்குகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது.
அதன்படி, மில்லியன் கணக்கான பயனர்களின் செயலற்ற Gmail கணக்குகள் நீக்கப்படவுள்ளன.
கடந்த இரண்டு வருடங்களில் பயன்படுத்தப்படாத Gmail கணக்குகள் அதன் டேட்டா சிஸ்டத்தில் இருந்து நீக்கப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Gmail கணக்குகளை நீக்குவதற்கு முன், அதன் உரிமையாளர்களுக்கு பல அறிவிப்புகள் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, செயல்படாத Gmail கணக்குகளை மீண்டும் இயக்க கால அவகாசம் வழங்கவும் கூகுள் திட்டமிட்டுள்ளது.
பயனாளர்களின் தகவல்களை மோசடி செய்பவர்களிடமிருந்து பாதுகாக்கும் வகையில் செயல்படாத Gmail கணக்குகளை நீக்க கூகுள் முடிவு தீர்மானித்துள்ளது.