இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நேற்று முடிவடைய இருந்த போர் நிறுத்தத்தை மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்க இரு தரப்பும் முடிவு செய்துள்ளன.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான 04 நாள் யுத்த நிறுத்தம் கட்டாரின் தலையீட்டால் நேற்றிரவு (27) முடிவுக்கு வரவிருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஹமாஸ் பணயக்கைதிகள் விடுவிக்கப்படும் ஒவ்வொரு 10 பேருக்கும் ஒரு நாள் போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் நிபந்தனையை அமல்படுத்த எதிர்பார்ப்பதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.
இரண்டு நாட்கள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 இஸ்ரேலிய பிணைக் கைதிகளும், இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 60 பாலஸ்தீன கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் அமலில் இருக்கும் போர்நிறுத்தத்தின் போது இஸ்ரேலியர்கள் மற்றும் இஸ்ரேலியர்கள் அல்லாதவர்கள் உட்பட 69 பணயக்கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது.