Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவங்கிகளின் வருடாந்த உரிமக் கட்டணம் அதிகரிப்பு

வங்கிகளின் வருடாந்த உரிமக் கட்டணம் அதிகரிப்பு

உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற சிறப்பு வங்கிகளுக்கான பயனுள்ள வருடாந்த உரிமக் கட்டணங்களை திருத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

சம்பந்தப்பட்ட வருடத்தின் ஜனவரி 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் உரிய கட்டணங்கள் செலுத்தப்பட வேண்டும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதன்படிஇ 25 பில்லியன் ரூபாவிற்கும் குறைவான சொத்துக்களைக் கொண்ட சிறிய அளவிலான உரிமம் பெற்ற வங்கிகளுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான உரிமக் கட்டணமாக 3.3 மில்லியன் ரூபா அறவிடப்பட்டதுடன்இ 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் அது வருடத்திற்கு 3.5 மில்லியன் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

2இ000 பில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களைக் கொண்ட வங்கிகளுக்கான வருடாந்த உரிமக் கட்டணம் 38 மில்லியனில் இருந்து 40 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles