Friday, April 24, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

எதிர்வரும் பண்டிகை காலத்திற்காக 100,000 மெற்றிக் டன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி அடுத்த சில நாட்களில் அரிசி இருப்புக்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அரிசி இறக்குமதி மூலம் விலையை கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில் இறக்குமதி செய்யப்படும் அரிசியின் அளவை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

நீண்டகாலமாக பாரிய ஆலை உரிமையாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் விலையேற்றம் காரணமாக நிலைமையை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வு குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles