ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பில் நேற்று (09) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
‘ஊழல் மிக்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளை நீக்குதல்’ எனும் தலைப்பில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி என்பன இணைந்து குறித்த பிரேரணையை முன்வைத்திருந்தன.
குறித்த பிரேரணை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டதுடன் ஆளும் கட்சியினால் ஆமோதிக்கப்பட்டது.
எவ்வாறாயினும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரேரணை நிறைவேற்றும் வேளையில் சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.