Tuesday, June 30, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகம்பளையில் பெண்ணொருவர் மர்ம மரணம்

கம்பளையில் பெண்ணொருவர் மர்ம மரணம்

கம்பளை – நவதேவிட்ட பிரதேசத்தில் வீடொன்றில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நேற்று (09) கிடைத்த தகவலின் அடிப்படையில் கம்பளை பொலிஸ் நிலையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கம்பளை பிரதேசத்தை சேர்ந்த 63 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் வீட்டில் தனியாக தங்கியிருந்த நிலையில், வேலை முடிந்து வீடு திரும்பிய மகள், தாயாரை அழைத்துள்ளார்.

எனினும் தாயிடமிருந்து பதில் வராததால், அவரை தேடிய போது வீட்டின் கட்டில் ஒன்றின் கீழ் கழுத்தில் துணி பட்டியொன்று கட்டப்பட்ட நிலையில் தாயின் சடலத்தை அவர் அவதானித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில், கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles