Friday, March 27, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு திங்கள் விடுமுறை

மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு திங்கள் விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (13) மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் இது தொடர்பான கோரிக்கையை மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு.கமகேவிடம் விடுத்திருந்தார்.

அந்தகோரிக்கையை ஏற்று திங்கட்கிழமை விடுமுறை வழங்குவதற்கும், அந்த நாளுக்குரிய கல்வி நடவடிக்கையை ஈடுசெய்வதற்காக எதிர்வரும் சனிக்கிழமை (18) மத்திய மாகாணத்தில் தமிழ் பாடசாலைகளை நடத்துவதற்கும் ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles