Sunday, June 28, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகிரிந்திவெல பகுதியில் பெண்ணொருவர் கொலை

கிரிந்திவெல பகுதியில் பெண்ணொருவர் கொலை

கிரிந்திவெல – மீவிட்டிகம்மன பிரதேசத்தில் 35 வயதுடைய பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தனது குழந்தை மற்றும் பெற்றோருடன் வசிப்பதாகவும், அவரது கணவர் வெளிநாட்டில் பணியாற்றி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் தனியாக இருந்த வேளையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கொலையின் பின்னர் கணவரின் சகோதரர் வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொலைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என்பதுடன்இ சடலம் வட்டுபிட்டியலை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கிரிந்திவெல பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles