Saturday, May 3, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை அரசியல்வாதிகள் தொடர்பில் CPA ஆய்வில் வெளியான தகவல்

இலங்கை அரசியல்வாதிகள் தொடர்பில் CPA ஆய்வில் வெளியான தகவல்

மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தினால் (Center for Policy Alternatives) நடத்திய ஆய்வின்படி, அனைத்து அரசியல்வாதிகளும் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்று 96.2% இலங்கையர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அந்த சொத்துக்கள் அவர்களுக்கு உரியது என நிரூபிக்க முடியா விட்டால், அவை பறிமுதல் செய்யப்பட வேண்டும் எனவும் மக்கள் எதிர்பார்ப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என 87.3% பேரும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என 89.7% பேரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், 55.9% பேர் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களை நீக்குவதற்கு ஆதரவாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும் என 74 சதவீதமானோர் தெரிவித்துள்ளனர்.

மேலும், தற்போதைய பொருளாதார நெருக்கடி தங்களின் அல்லது குடும்ப உறுப்பினரின் வருமானத்தை நேரடியாக பாதித்துள்ளதாக 90% பேர் கூறுகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles