ஹோமாகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் 22 வயதுடைய யுவதியொருவர் இன்று (08) காலை கழுத்து அறுத்து கொல்லப்பட்டுள்ளார்.
கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்று களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெஹிவளை ஆண்டர்ன் வீதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளில், காதல் உறவின் அடிப்படையில் இந்தக் கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் இன்று காலை களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவரது சட்டைப் பையில் இரத்தக் கறை காணப்பட்டதை அடுத்து, தலைமையக பொலிஸ் பரிசோதகரின் பணிப்புரையின் பேரில் மேலதிக விசாரணைகளின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.