Thursday, January 16, 2025
27.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச வைத்தியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

அரச வைத்தியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) மாகாண மட்டத்தில் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

ஊவா மாகாணத்தில் உள்ள வைத்தியர்கள் நேற்றைய தினம் சேவையில் இருந்து விலகிய நிலையில் GMOA உறுப்பினர்கள் நேற்று தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இன்று காலை GMOA உறுப்பினர்கள் வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் 24 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

எவ்வாறாயினும், சில கோரிக்கைகளுக்கு சாதகமான பதில்கள் கிடைத்துள்ளதால், பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக GMOAவின் பொதுச் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

வரி விதிப்புத் திருத்தங்கள் உட்பட அவர்களது கோரிக்கைகளை அதிகாரிகள் நிவர்த்தி செய்யத் தவறியதால், மாகாண மட்டத்தில் தொடர் வேலைநிறுத்தங்களைத் தொடங்க தர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைவாக எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி வரை பல்வேறு மாகாணங்களில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles