Thursday, September 11, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டு14 வயது சிறுமியை வன்புணர்ந்த பாட்டன் உட்பட மூவர் கைது

14 வயது சிறுமியை வன்புணர்ந்த பாட்டன் உட்பட மூவர் கைது

பெற்றோரின் அரவணைப்பை இழந்த 14 வயது சிறுமியை தொடர்ச்சியாக துஷ்பிரயோகம் செய்த அவரது பாட்டன் உட்பட மூவரை மொரகஹஹேன பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த மேலும் சிலரைக் கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹொரண – மொரகஹஹேன பிரதேசத்தில் குறித்த சிறுமி தனது பாட்டியின் பாதுகாப்பில் இருந்த நிலையில், சிறுமியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் 80 வயதான பாட்டன் மற்றும் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மற்ற இருவரும் சிறுமியின் அத்தை மற்றும் பாட்டியின் பிள்ளைகள் என தெரியவந்துள்ளது.

சிறுமியின் மாமா என கூறப்படும் ஒருவர் மற்றும் பாடசாலை மாணவர் உட்பட மேலும் இருவர் கைது செய்யப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles