Sunday, June 28, 2026
26.7 C
Colombo
அரசியல்இந்திய நிதியமைச்சர் - ஜனாதிபதி ரணில் சந்திப்பு

இந்திய நிதியமைச்சர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நேற்று மாலை இடம்பெற்றது.

ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இந்த சந்திப்பில் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பக்லேவுடன் உள்ளிட்டு இந்திய தூதுக்குழுவினரும் பங்கேற்றுள்ளனர்.

இந்த இருதரப்பு பேச்சு வார்த்தையில் இலங்கை மற்றும் இந்தியா இடையில் பௌத்த உறவுகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கத்தின் 15 மில்லியன் டொலர் அன்பளிப்புடன் முன்னெடுக்கும் திட்டங்கள் தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் பரிமாறப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles