Saturday, November 1, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகார் மோதி இருவர் பலி

கார் மோதி இருவர் பலி

எம்பிலிபிட்டிய – மொரகெட்டிய வீதியின் இலுக்கெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று காலை அம்பிலிபிட்டியவிலிருந்து மொரகெட்டிய நோக்கிச் சென்ற கார் ஒன்று வீதியோரத்தில் பயணித்த மூவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்த மூன்று பாதசாரிகள் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவர் உயிரிழந்துள்ளனர்.

மொரகட்டிய பிரதேசத்தை சேர்ந்த 58 மற்றும் 71 வயதுடைய இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், எம்பிலிபிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles