உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று (23) ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுப்பைத் தெரிவு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 282 ஓட்டங்களை பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அணியின் அதிகபட்சமாக 74 ஓட்டங்களை பாபர் அசாம் பெற்றதுடன் அப்துல்லா ஷபீக் 58 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
283 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 49 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அணிசார்பில் அதிகபடியாக இப்ராஹிம் சத்ரான் 87 ஓட்டங்களையும், ரஹ்மத் ஷா 77 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில், பாகிஸ்தான் அணியின் ஹசன் அலி 44 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.