கேரளாவில் குடும்பமொன்று உயிர்மாய்த்த சம்பவத்திற்கு இலங்கையை சேர்ந்த இணையவழி கடன் வழங்கும் கும்பலே காரணம் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கேரளாவில் கடமக்குடியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், இலங்கையை சேர்ந்த உடனடி கடன் வழங்கும் வலையமைப்பே இதற்கு காரணம் என கண்டுபிடித்துள்ளனர்.
நிஜோ ஜொனி அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் கடந்த செப்டம்பர் 12ம் திகதி, வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர்.
அவர்களின் தற்கொலை குறித்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், ஜொனியின் மனைவி சில்பா பல கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்து கடன்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
ஆனால் அவரால் அதனை திருப்பி செலுத்த முடியாத நிலை காணப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சில்பாவினால் கடனை திருப்ப முடியதா நிலையேற்பட்டவுடன் கடன் வழங்கிய நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவருக்கும் அவரது குடும்பத்தினரையும் மிரட்ட ஆரம்பித்துள்ளனர்.
இந்த மிரட்டல்கள் தொடர்பில் ஆராய்ந்தவேளை அது இலங்கையிலிருந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
முதலில் இது வடஇந்தியாவை சேர்ந்தவர்கள் என பொலிஸார் சந்தேகித்துள்ளனர். எனினும் பாதிக்கப்பட்டவர்கள் உரையாடிய வட்ஸ்அப் இலக்கங்களை பரீட்சித்த போது பல்வேறு தகவல் கிடைத்துள்ளது.
இலங்கையை சேர்ந்த குற்றவாளிகள் இதில் தொடர்புபட்டுள்ளனரா என்பதை உறுதி செய்வதற்காக நாங்கள் மேலும் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#New Indian Express