இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் பிரஜைகளுக்கு இலங்கை வர இலவச விசா வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், ஒரு முன்னோடித் திட்டமாக இது 2024 மார்ச் 31ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.