Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமனைவியை கொன்று தன் உயிரை மாய்த்துக் கொண்ட நபர்

மனைவியை கொன்று தன் உயிரை மாய்த்துக் கொண்ட நபர்

பூகொட -மண்டாவல பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கொலை செய்து ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (23) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, குறித்த நபர் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர் சந்தேகத்தின் பேரில் கணவனை கைது செய்ய பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது அவர் வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணுக்கு 46 வயது எனவும், கணவருக்கு 54 வயது எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விசாரணையில் இருவருக்கும் இடையே சில காலமாக தகராறு இருந்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles