நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று உயர் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளார்.
சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம்இ இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பான திருத்தங்கள் நாடாளுமன்ற குழுநிலை கூட்டத்தின் போது முன்வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போது இந்த அறிவிப்பு வெளியானது.
குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி 50க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.