தென் கொரியாவின் பிரதிப் பிரதமர் சுகியோங் ஹோ மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆகியோர் சந்தித்துள்ளனர்.
இக்கலந்துரையாடலின் போது, இலங்கையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் மற்றும் கொரியாவில் உள்ள இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கொரியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சி மற்றும் வளர்ச்சிக்கு கற்றுக்கொண்ட பாடங்கள் இலங்கையின் தொடர்ச்சியான சீர்திருத்தங்களுக்கு முக்கியமானதாக அமையும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
தென்கொரியா தொடர்ந்தும் இலங்கைக்கு ஒத்துழைப்பை வழங்கும் என்றும் பிரதியமைச்சர் உறுதியளித்துள்ளார்.