Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உலகம்பீகாரில் ரயில் தடம் புரண்டதில் 4 பேர் பலி

பீகாரில் ரயில் தடம் புரண்டதில் 4 பேர் பலி

பீகார் மாநிலத்தில் ரயில் தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று இரவு டெல்லியில் இருந்து அசாம் மாநிலத்தின் காமாக்யா நோக்கி பயணித்த ரயில் ரகுநாத்பூர் ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டது.

இதன்போது சுமார் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் மீட்புப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 296 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles