ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.
ஹெராத் பகுதியில் உள்ள 12 கிராமங்கள் நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 1,000 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில், மேற்கு ஆப்கானிஸ்தானில் ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டதுடன், அதில் 2,445 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.