செய்திகள்உள்நாட்டுஆணொருவர் சடலமாக மீட்பு

ஆணொருவர் சடலமாக மீட்பு

பெலவத்த பதுரலிய வீதியில் கல்கடுவ பிரதேசத்தில் உள்ள கால்வாயில் இன்று (10) மாலை ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாக மீகஹாதென்ன பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், காணாமல் போனதாக கூறப்படும் பெலவத்த வன்ஹலுகொட பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், கடந்த 4 ஆம் திகதி காலை முதல் அவர் தொடர்பில் தகவல் எதுவும் இல்லை என அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles