Saturday, May 9, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகட்டுநாயக்க விமான நிலையம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டது

கட்டுநாயக்க விமான நிலையம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டது

இதுவரை காகித ஊடகத்தைப் பயன்படுத்தி வந்த விமான போக்குவரத்து மற்றும் வழிசெலுத்தல் தகவல் தொடர்பாடல் செயல்முறை இன்று (10) முதல் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.

அதன்படி, விமானிகளும், விமானக் கட்டுப்பாட்டாளர்களுக்கும் அத்தியாவசியமான ‘ஏரோநாட்டிகல் நேவிகேஷன் இன்பர்மேஷன் பப்ளிகேஷன்’ ஒன்லைன் மூலம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு அவர்களுக்குக் கிடைக்கும்.

மேலும், ஒரு விமானத்தில் கட்டாய ஆவணமாக இருக்கும் விமானத் திட்டம், விமானங்களைச் சரியாகச் செயல்படுத்துவதற்குத் தேவையான வானூர்தி தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கான தரவுத்தளமாகவும் செயல்படவுள்ளது.

சர்வதேச சிவில் ஏவியேஷன் அமைப்பின் பரிந்துரைகளுக்கு அமைய, 1.2 பில்லியன் ரூபா செலவில் பிரான்சின் MS Thales நிறுவனம் தயாரித்த இந்த அமைப்பை கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுவ விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles