இலங்கை, அவுஸ்திரேலியா வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்தத்தை நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் 2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு இடையே வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
மேற்படி வர்த்தக உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை தொடரும் வகையில் குறித்த ஒப்பந்தத்தை இன்று (10) முதல் ஐந்து வருடங்களுக்கு நீடிப்பதற்கு வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அவுஸ்திரேலியா இலங்கையில் முக்கியமான வெளிநாட்டு நேரடி முதலீட்டு பங்காளியாகவும்இ சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஐந்தாவது பெரிய ஆதாரமாகவும் உள்ளது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
