நாட்டிற்கு ஒரு சதம் கூட கடன்பட்டிருக்காத தலைவர் மஹிந்த ராஜபக்ஷ என வணக்கத்திற்குரிய பெல்லன்வில தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.
இன்று (10) காலை மஹிந்த ராஜபக்ஷ பெல்லன்வில ரஜமகா விகாரைக்கு சென்றிருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
‘இந்த நாட்டில் இருந்த தலைவர்களில் மஹிந்த ராஜபக்ஷ,நாட்டுக்கு கடன் இல்லாத ஒரு தலைவர். அவருக்கு முழு நாடும் கடன்பட்டிருக்கிறது என்பதை அச்சமின்றி கூற விரும்புகிறேன். அவர் நம் நாட்டை பெரும் அழிவிலிருந்து காப்பாற்றினார். சாத்தியம் என்று யாரும் சொல்லாத போதும்இ எல்லோரும் பின்னோக்கி செல்லும் போதும், சிலர் கைவிட்ட போதும் இலங்கையை ஒன்றிணைத்தார்.’ என்றார்.
