Saturday, May 9, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாரவூர்தியில் மோதுண்டு பொலிஸ் கான்ஸ்டபிள் பலி

பாரவூர்தியில் மோதுண்டு பொலிஸ் கான்ஸ்டபிள் பலி

குருநாகல் – பொல்கஹவெல பிரதான வீதியின் புஹுரிய சந்தியில் மணல் ஏற்றிச் செல்லும் பாரவூர்தியில் மோதுண்டு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொல்கஹவெல பொலிஸார் தெரிவித்தனர்.

 இவ்வாறு உயிரிழந்தவர் (45) வயதுடைய பொல்கஹவெல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

நேற்றிரவு குறித்த கான்ஸ்டபிள் நடமாடும் சேவையில் ஈடுபட்டிருந்த போது, வீதியில் வாகனங்களையும் மக்களையும் சோதனை செய்து கொண்டிருந்த போது, கந்தளேயிலிருந்து கடுவலைக்கு மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வீதியின் ஓரத்தில் மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்துள்ளார்.

 சம்பவத்தில் பலத்த காயமடைந்த கான்ஸ்டபிள் பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து சந்தேகநபரான டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles