செய்திகள்உள்நாட்டுIMF - உலக வங்கியின் பிரதிநிதிகளை சந்தித்தார் ஷெஹான்

IMF – உலக வங்கியின் பிரதிநிதிகளை சந்தித்தார் ஷெஹான்

மொரோக்கோவிற்கு விஜயம் செய்துள்ள நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கும் உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஸ்வரன் ஐயருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது இலங்கைக்கு ஆதரவான வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் சீர்திருத்தங்களின் வெற்றிக்கு உலக வங்கி வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இராஜாங்க அமைச்சரும் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான கே. சுப்ரமணியனுக்கும் இடையே சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் உள்ளிட்ட தற்போதைய பொருளாதார நிலைமைகள் மற்றும் இலங்கையின் பொருளாதாரம் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles