காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் நாளை திறக்கப்படவுள்ளன.
பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளும் நாளை திறக்கப்படும் என தென் மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
