Monday, November 18, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபல நாடுகள் இலங்கை குரங்குகளை வழங்குமாறு கோருகின்றன - மஹிந்த அமரவீர

பல நாடுகள் இலங்கை குரங்குகளை வழங்குமாறு கோருகின்றன – மஹிந்த அமரவீர

சீனாவைத் தவிர இன்னும் பல நாடுகள், தமக்கு விலங்கியல் பூங்காக்களுக்கு இலங்கையின் டோக் மக்காக் குரங்குகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அந்த நாடுகளில் உள்ள அந்தந்த தூதரகங்கள் ஊடாக இந்த கோரிக்கையை முன்வைக்குமாறு அரசாங்கம் தமக்கு அறிவித்துள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கான கோரிக்கைகளை விலங்கு உரிமை அமைப்புகளும் ஆர்வலர்கள் சவால் செய்து மனு தாக்கல் செய்திருந்ததால் அவை நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குரங்குகள், காட்டுப்பன்றிகள் மற்றும் மயில்கள் போன்ற விலங்குகளால் ஆண்டுக்கு 20 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles