ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் குழுவால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.
மாளிகாவத்தை ரயில் வீதியின் நுழைவாயிலில் வைத்து ரயில்பாதுகாப்பு உத்தியோகத்தர் பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவரை தாக்கியதை அடுத்து, ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் நேற்று (04) முதல் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி நேற்று சுமார் 78 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டதுடன், பல ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று தாக்குதலுக்கு உள்ளான பாதுகாப்பு அதிகாரியை பணி இடைநிறுத்தம் செய்வதற்கு ரயில்வே திணைக்களம் முடிவு செய்திருந்தது.
ஆனால் தாக்குதலில் ஈடுபட்ட ஏனைய நபர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ரயில்வே பிரதி கட்டுப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.