செய்திகள்உள்நாட்டுமஸ்கெலியாவில் லொறி கவிழ்ந்து விபத்து

மஸ்கெலியாவில் லொறி கவிழ்ந்து விபத்து

மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் பகுதியில் நேற்று (03) இரவு 9.50 மணியளவில் லொறி ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள பிரவுன்ஸ்விக் தோட்ட புளும்பீல்ட் பகுதியில் இருந்து காசல்றி பகுதிக்கு மரண வீடொன்றுக்கு சென்று திரும்பும் வழியிலேயே இவ்விபத்து இடம்பெற்று இருப்பதாக மஸ்கெலியா போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.

விபத்தில் சாரதி உட்பட 22 பேர் காயமடைந்துள்ளனர்.

இவர்களில் மூவர் அதிக அளவில் காயங்கள் ஏற்பட்டு நாவலப்பிட்டி ஆதார வைத்திய சாலைக்கும் கன்டி போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிர் சேதம் இல்லை என்பதுடன், விபத்துக்கான காரணங்கள் இது வரையில் கண்டறியப் படவில்லை.

மேலதிக விசாரனைகளை மஸ்கெலியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles