Monday, March 16, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதாயின் அனுமதியுடன் 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய நபர் கைது

தாயின் அனுமதியுடன் 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய நபர் கைது

தாயின் அனுமதியுடன், 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கியதாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

32 வயதுடைய நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட சந்தேக நபர், சிறுமியின் தந்தையின் உதவியாளராக பணிபுரிந்துள்ளதுடன், அவர் சிறுமியின் தாயுடன் தொடர்பு வைத்திருந்தாக கூறப்படுகிறது.

இருவரும் சுமார் மூன்று வருடங்களாக தொடர்பை பேணி வந்துள்ளதுடன், சந்தேக நபர் சிறுமியின் வீட்டிற்கு ரகசியமாக வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளின் போது சந்தேகநபர் தாயாருக்கு தெரிந்தே சிறுமியை வன்புணர்வு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மல்சிறிபுர பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு பிணை வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் வன்புணர்வுக்கு உள்ளான சிறுமியின் தாயார் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமி கல்கமுவ பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லத்திற்கு நன்னடத்தை மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles